உலகளாவிய மனிதாபிமான உறுதியளிப்புத் திட்டம்
March 28 , 2020
1947 days
637
- ஐக்கிய நாடுகள் அமைப்பானது கோவிட் – 19ற்கு எதிர்த்துப் போராடுவதற்காக “உலகளாவிய மனிதாபிமான உறுதியளிப்புத் திட்டத்தை” தொடங்கியுள்ளது.
- இந்த அமைப்பானது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளது.
- இத்திட்டமானது ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள 51 நாடுகளில் தொடங்கப் பட்டுள்ளது.
- இந்தத் திட்டமானது சர்வதேச அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நேரடியாகச் செயல்படுத்தப் படுகின்றது.
- இத்திட்டத்தின் கீழ், இந்த அமைப்பானது கொரானா வைரஸ் சோதனைக்காக தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களை வழங்க இருக்கின்றது.
Post Views:
637