TNPSC Thervupettagam

உலகளாவிய மின்சார மதிப்பாய்வு 2026

April 24 , 2026 14 hrs 0 min 33 0
  • எம்பர் அறிக்கையானது, 2025 ஆம் ஆண்டின் முக்கிய உலகளாவிய மின்சாரப் போக்குகள் மற்றும் தூய்மையான ஆற்றல் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
  • 2025 ஆம் ஆண்டில் புதிய மின்சாரத் தேவையின் வளர்ச்சியினைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முழுமையாகப் பூர்த்தி செய்ததோடு, புதைபடிவ எரிபொருள் உற்பத்தியின் அதிகரிப்பையும் தடுத்து நிறுத்தியது.
  • சூரிய சக்தியானது 636 டெராவாட்-மணிநேரம் (TWh) அதிகரித்து 2,778 TWh ஆக உயர்ந்து உள்ளதோடு இது 849 TWh ஆக உயர்ந்த மின் தேவையில் 75%-ஐ பூர்த்தி செய்துள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 33.8% பங்கினை எட்டியுள்ளதோடு இது கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறையாக நிலக்கரியை (33.0%) விஞ்சியுள்ளது.
  • புதைபடிவ எரிபொருள் உற்பத்தி 38 TWh குறைந்துள்ளதோடு சீனா (-56 TWh) மற்றும் இந்தியாவில் (-52 TWh) பெரும் சரிவும் ஏற்பட்டுள்ளது.
  • இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி 98 TWh அதிகரித்துள்ளதோடு சூரிய சக்தி 53 TWh மற்றும் காற்று சக்தி 22 TWh இதில் பங்களித்துள்ளன.
  • இந்தியாவின் மின் தேவை 49 TWh ஆக அதிகரித்துள்ள நிலையில், நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி சுமார் 44 TWh குறைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்