2025 ஆம் ஆண்டு உலகளாவிய மின்சார வாகனக் கண்ணோட்ட அறிக்கையானது சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) வெளியிடப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் 17 மில்லியனைத் தாண்டிய மின்சாரக் கார்களின் உலகளாவிய விற்பனையானது, 2025 ஆம் ஆண்டில் 20 மில்லியனைத் தாண்டும் நிலையில் உள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய மின்சாரக் கார்களின் இருப்பானது சுமார் 58 மில்லியனை எட்டியது, அதாவது மொத்தப் பயணிகள் கார் உற்பத்தி தொகுப்பில் 4 சதவீதத்தினை எட்டியது.
அவை அந்த ஆண்டில் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்களுக்கு மேலான (mb/d) எண்ணெய் நுகர்விற்கு மாற்றாக அமைந்தது.
சீனா, அதன் மலிவு விலையிலான சில வகைகளுடன், 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய ஏற்றுமதியில் சுமார் 40% பங்கைக் கொண்டு உலகளாவிய மின்சார கார் ஏற்றுமதியில் முன்னிலை வகித்தது.
2024 ஆம் ஆண்டில் தாய்லாந்தில், ஒரு சீன மின்சார வாகனத்தின் சராசரி விலை ஆனது ஒரு வழக்கமான காரின் சராசரி விலையை விட குறைவாக இருந்தது.
பிரேசில் நாட்டில், சீன மின்சார கார் இறக்குமதிகள் 2024 ஆம் ஆண்டில் நாட்டின் மின்சார வாகன விற்பனையில் 85 சதவீதத்தை எட்டின.
இந்தியாவில், மிக அதிக இறக்குமதி வரிகள் மற்றும் உள்ளூர் வகைகளின் கிடைக்கும் தன்மை ஆகியவை, சந்தையில் சீன மின்சார வாகனங்களின் பங்கினைச் சுமார் 15 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுப்படுத்தியது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவை 100 சதவீதத்திற்கும் அதிகமான அளவிலான கட்டணங்களை விதித்தன.