லண்டன் பருவநிலை நடவடிக்கை வாரத்தின் போது, 2026 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று ஐக்கிய நாடுகள் சபை மீத்தேன் குறைப்பிற்கான உலகளாவிய அழைப்பு மற்றும் 'செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் வெளிப்படைத்தன்மை முன்னெடுப்பு’ ஆகியவற்றைத் தொடங்கியது.
கார்பன் டை ஆக்சைடை விட குறுகிய காலத்தில் சுமார் 80 மடங்கு அதிக வீரியம் கொண்ட பசுமை இல்ல வாயுவான மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறை கசிவுகள், வெளியேற்றுதல் மற்றும் எரித்தல் ஆகியவற்றின் மூலம் மீத்தேன் உமிழ்வின் முக்கிய ஆதாரமாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
உமிழ்வை 70% வரை குறைக்க, பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான மீத்தேன் உமிழ்வு மற்றும் தற்போதைய தொழில்நுட்பங்களை பரவலாகப் பயன்படுத்த ஐநா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பானது, முக்கிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தரவு மையங்களின் கார்பன், நீர் மற்றும் நிலப் பயன்பாட்டுத் தடயங்களை கட்டாயமாக வெளிப்படுத்துவதைக் கோருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்காக, 2030 ஆம் ஆண்டிற்குள் தரவு மையங்களை முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயக்குமாறு செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை ஐநா வலியுறுத்தியுள்ளது.