இந்த அறிக்கையை எக்ஸிடர் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
புவி வெப்பமடைதல் ஆனது 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று கணிக்கப் பட்டு உள்ளது என்ற நிலையில்இது புவியை மீளமுடியாத பல மீள் எழுச்சி/ உச்ச கட்ட மாற்ற நிலைகளை நோக்கித் தள்ளும்.
வெதுவெதுப்பான நீர் பகுதிகளில் காணப்படும் பவளப்பாறைகள் ஏற்கனவே 1.2 டிகிரி செல்சியஸுக்கு அருகில் அதன் வெப்ப மிகு வளர்ச்சி நிலையை கடந்துவிட்டன.
அமேசான் மழைக்காடுகள் 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே பரவலாக அழிந்து வருகின்றன என்ற நிலையில்இது 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.
அட்லாண்டிக் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் (AMOC) என்ற பெருங்கடல் நீரோட்டம் ஆனது குறையும் அபாயத்தில் உள்ளது என்ற நிலையில்இது உலகளாவிய உணவு மற்றும் நீர் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது.
இந்த உச்ச கட்ட நிலைகள், நிலையற்ற வழிகளில் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதால், அடுக்கடுக்கான சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கங்களை மேலும் உருவாக்குகின்றன.
மீள முடியாத விளைவுகளைத் தடுக்க உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வானது 2030 ஆம் ஆண்டில் பாதியாகக் குறைக்கப்பட்டு 2050 ஆம் ஆண்டில் நிகரச் சுழிய நிலையை அடைய வேண்டும்.
தற்போதைய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகள் (NDCs) ஆனது போதுமானதாக இல்லை என்ற நிலையில் இது 2 டிகிரி செல்சியஸுக்கு மேலான வெப்ப மயமாதலுக்கு வழி வகுக்கும்.
கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் தாழ் வெப்ப மண்டல மிகு வளர்ச்சி நிலைகள் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.