TNPSC Thervupettagam

உலகளாவிய முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கை

January 30 , 2026 17 hrs 0 min 8 0
  • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) அமைப்பானது 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டது.
  • உலகளாவிய நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) 2025ல் 14% அதிகரித்து 1.6 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.
  • உலகளாவிய நேரடி வெளிநாட்டு முதலீட்டு அதிகரிப்பில் 140 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை, உலகளாவிய நிதி மையங்கள் வழியாக வந்த அதிகப்படியான நிதி வரவுகளிலிருந்து கிடைத்தது.
  • வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான நேரடி வெளிநாட்டு முதலீட்டு வரத்து 2025-ல் 43% அதிகரித்து 728 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • ஐரோப்பிய ஒன்றியம் 56% அதிகரிப்பைப் பதிவு செய்தது.
  • ஆனால், வளரும் நாடுகளுக்கான முதலீட்டு வரத்து 2 சதவீதம் குறைந்து 877 பில்லியன் டாலராக ஆனது, இது உலகளாவிய நேரடி வெளிநாட்டு முதலீட்டில் 55 சதவீதமாகும்.
  • UNCTAD என்பது 1964-ல் நிறுவப்பட்ட ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பாகும் என்பதோடு இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்