கொலியர்ஸ் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மூலதன ஓட்ட அறிக்கையின் படி, நிலம் மற்றும் புதிய நிலங்களின் மீதான எல்லை கடந்த முதலீடுகளில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த தரவரிசை, உலகளாவிய ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆசிய-பசிபிக் (APAC) சந்தைகளில் மனை சார் முதலீடுகள் 71.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளன.
இந்தியா 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் ரியல் எஸ்டேட் முதலீடுகளைப் பெற்றுள்ளது.
இதில் வெளிநாட்டு முதலீடுகள் சுமார் 1.6 பில்லியன் டாலர் (சுமார் 52%) பங்களித்து உள்ளன, அதே நேரத்தில் உள்நாட்டு முதலீடுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
குடியிருப்பு மற்றும் அலுவலக ரியல் எஸ்டேட் திட்டங்கள் முக்கிய முதலீட்டுத் துறைகளாக உள்ளன.