உலகளாவிய மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு மற்றும் மாநாடு 2026
August 29 , 2026 20 days 72 0
சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் சமூகத்தினர் ஆண்டின் (IYRP) கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு மற்றும் மாநாட்டை மங்கோலியா தொகுத்து வழங்கியது.
இந்த மாநாட்டில் நிலையான மேய்ச்சல் மற்றும் மேய்ச்சல் நில மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது.
மங்கோலியாவின் உணவு, விவசாயம் மற்றும் சிறுதொழில் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தன.
பங்கேற்பாளர்கள் உலகளாவிய மேய்ச்சல் சமூகத்தினரின் பிரகடனம், மேய்ச்சல் சமூகப் பெண்களின் பிரகடனம் மற்றும் மேய்ச்சல் சமூக இளைஞர்களின் பிரகடனம் ஆகியவற்றைத் தயாரித்தனர்.
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மங்கோலியா தொகுத்து வழங்கும் பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCCD COP17) விவாதங்களுக்கு இதன் முடிவுகள் பங்களிக்கும்.