ஹுருன் அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீடு ஆனது ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
சுமார் 758 யூனிகார்ன் நிறுவனங்களுடன் அமெரிக்கா இதில் முதலிடத்தில் உள்ளது என்ற நிலைமையில் அதைத் தொடர்ந்து 343 யூனிகார்ன் நிறுவனங்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
சான் பிரான்சிஸ்கோ உலகின் முன்னணி யூனிகார்ன் நகரமாகும், அதைத் தொடர்ந்து நியூயார்க் மற்றும் பெய்ஜிங் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
புத்தொழில் நிறுவனங்களின் பிரிவில் வலுவான வளர்ச்சியைக் காட்டும் வகையில் 64 யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
அதிக யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்திய அளவில் பெங்களூரு முன்னணியிலும், உலகளாவிய நகரங்களில் 7வது இடத்திலும் உள்ளது.
மும்பை மற்றும் குருகிராம் ஆகியவை முறையே யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகளவில் 22வது மற்றும் 27வது இடங்களில் உள்ளன.
உலகளவில், 52 நாடுகளில் 1,523 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன, அவற்றின் மொத்த மதிப்பு 5.6 டிரில்லியன் டாலர் ஆகும்.