உலகளாவிய வருடாந்திரம் முதல் பத்தாண்டு கால பருவநிலை தகவல் அறிக்கை
May 16 , 2022 1104 days 510 0
உலகளாவிய வருடாந்திரம் முதல் பத்தாண்டு கால பருவநிலை தகவல் அறிக்கை என்பது சமீபத்தில் உலக வானிலை அமைப்பினால் வெளியிடப்பட்டது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல் என்ற ஒரு வரம்பினைத் தற்காலிகமாக மீறுவதற்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது.
2022 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டாவது 2016 ஆம் ஆண்டிற்குப் பதிலாக மிகவும் வெப்பமான ஆண்டாக மாற 93 சதவீத வாய்ப்பு உள்ளது.
தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையைத் தாண்டுவதற்கான ஒரு வாய்ப்பு 2015 ஆம் ஆண்டில் அது பூஜ்ஜியத்தை நெருங்கியதில் இருந்து படிப்படியாக உயர்ந்து உள்ளது.
உலக அளவில் 2022 ஆம் ஆண்டு மற்றும் அடுத்த நான்கு ஆண்டுகளில் இயல்பை விட குறைவான வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ள நாடுகளில் சில பகுதிகளில் இந்தியாவும் இடம் பெறலாம்.
இது கடந்தப் பத்தாண்டுகளில் நிலவிய மழைப் பொழிவுகளின் ஒரு சாத்தியமான அதிகரிப்பு காரணமாகவும் இருக்கலாம்.
இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும்.