உலகளாவிய வாழத் தகுந்த நகரங்கள் குறியீடு 2022
June 28 , 2022
1148 days
531
- இது பொருளாதார நுண்ணறிவு அலகு என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டது.
- தனுபே ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா, உலகிலேயே மிகவும் வாழத் தகுந்த நகரமாகும்.
- இரண்டாவது இடத்தில் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் உள்ளது.
- ஒட்டு மொத்த வெற்றியாளரின் அடிப்படையில் கனடா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
- இதில் புது டெல்லி 112வது இடத்திலும், மும்பை 117வது இடத்திலும் உள்ளது.
- சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ், வாழத் தகுந்த வாய்ப்புகளை மிகவும் குறைவாகக் கொண்டுள்ள 10 நகரங்களில் கடைசி இடத்தில் உள்ளது.
- இந்த ஆண்டு, இந்த அறிக்கை உலகம் முழுவதும் உள்ள 173 நகரங்களை ஆய்வு செய்கிறது.
- உறுதித் தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள் கட்டமைப்பு ஆகிய ஐந்து முக்கியப் பிரிவுகள் இதில் கருத்தில் கொள்ளப்பட்டன.

Post Views:
531