TNPSC Thervupettagam

உலகளாவிய வாழ்க்கைச் செலவினக் குறியீடு 2021

December 3 , 2021 1446 days 695 0
  • டெல் அவிவ் நகரமானது பாரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களை விஞ்சி உலகின் வாழ்வதற்கு மிக விலையுயர்ந்த நகரமாக மாறியுள்ளது.
  • இது பொருளாதார நுண்ணறிவு அமைப்பின்  2021 ஆம் ஆண்டு உலகளாவிய வாழ்க்கைச் செலவினக் குறியீட்டில் கூறப்பட்டுள்ளது.
  • அமெரிக்க டாலருக்கு நிகரான இஸ்ரேலியப் பணமான செக்கலின் (shekel) விலை உயர்வு மற்றும் மளிகை & போக்குவரத்து ஆகியவற்றின்  விலை உயர்வு காரணமாக டெல் அவிவ் 2021 ஆம் ஆண்டில் 5வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியது.
  • பாரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும் 2வது இடத்தில் உள்ளன.
  • இவற்றைத் தொடர்ந்து சூரிச் மற்றும் ஹாங்காங் ஆகியவை முறையே 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன.
  • சிரியாவின் டமாஸ்கஸ் நகரமானது  உலகின் வாழ்வதற்கு மிகக் குறைந்த செலவினம் கொண்ட ஒரு நகரமாக தரப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்