ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வானது குறிப்பிடத்தக்க வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் உலகின் முதல் 50 நகர்ப்புற மையங்களில் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளது.
வெப்ப வெளிப்பாடு, மக்களின் பாதிப்பு நிலை மற்றும் சமாளிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இது வெப்ப அபாயத்தை மதிப்பிட்டது.
0.68 வெப்ப அபாயப் புள்ளிகளுடன் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய உலகின் முதல் 30 நகரங்களில் ஹைதராபாத் இடம்பிடித்துள்ளது.
உலகளவில் குறிப்பிடத்தக்க வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளை விட இந்திய நகர்ப்புறப் பகுதிகள் சுமார் 45% வேகமாக வெப்பமடையக் கூடும் என்று கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் சபையின் (CEEW) கூற்றுப்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 76% க்கும் அதிகமானோர் கடுமையான வெப்பத்தால் அதிக முதல் மிக அதிக அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.