என்றென்றும் நிலைக்கும் வெப்பமண்டலக் காடுகளுக்கான நிதிச் செயல்முறையில் (TFFF) முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கும் முதல் நாடு பிரேசில் ஆகும்.
இது உலகளவில் அருகி வரும் வெப்பமண்டலக் காடுகளைப் பாதுகாப்பதை ஆதரிக்கும் ஒரு பலதரப்பு நிதியாகும்.
நவம்பர் மாதத்தில் பிரேசில் நடத்த உள்ள COP30 மாநாட்டிற்கு முன்னதாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் தனது முதலீடு குறித்து அறிவிக்க அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா திட்டமிட்டுள்ளார்.
பிற நாடுகளையும் தனியார் முதலீட்டாளர்களையும் இதில் சேர ஊக்குவிப்பதற்காக "கணிசமான" ஆரம்ப கட்டப் பங்களிப்புடன் ஓர் அளவுருவினை அமைக்க பிரேசில் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
TFFF ஆனது இறையாண்மை மற்றும் தனியார் துறை நிதிகளை இணைத்து, நாடுகளின் வருடாந்திர உதவித் தொகையை அவற்றின் மீதமுள்ள வெப்ப மண்டலக் காடுகளின் அடிப்படையில் செலுத்துவதற்கு 125 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த நிதிக்கான ஆரம்ப நிலை நிதி ஆதரவு சீனா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, ஜெர்மனி, நார்வே, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றிலிருந்து பெறப் பட்டுள்ளது.
பிரேசில் நாடானது, தனது முதலீடு மேலும் நிதி வழங்கீடு சார்ந்த உறுதிப்பாடுகளை ஊக்குவிக்கும் என்று நம்புகிறது என்பதோடு இது நிதியின் மீதான நம்பிக்கையைக் குறிக்கிறது மற்றும் உலகளாவியப் பருவநிலை நிதி ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.