TNPSC Thervupettagam

உலகளாவிய வேளாண் AI முன்னெடுப்பு - GI-AI4FS

October 14 , 2026 10 days 107 0
  • இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026 உடன் இணைந்து, வேளாண்-உணவு அமைப்புகளுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய முன்னெடுப்பின் (GI-AI4FS) இரண்டாவது கூட்டத்தை புது தில்லியில் இந்தியா தொகுத்து வழங்கியது.
  • தொலைத்தொடர்பு பொறியியல் மையம் (TEC) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஆகியவை கூட்டாக இக்கூட்டத்தை நடத்தின.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) இந்த முன்னெடுப்பை ஒருங்கிணைக்கிறது.
  • விவசாயத்திற்கு பொறுப்பான, நம்பகமான மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளை மேம்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலியின் ரோமில் நடைபெற்ற இந்த முன்னெடுப்பின் முதல் கூட்டத்தைத் தொடர்ந்து, ஆளுமை, பணிக்குழுக்கள் மற்றும் முன்னுரிமைப் பகுதிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்