உலகளாவியக் கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்கள் நிலை குறித்த அறிக்கை 2024 - 2025
March 22 , 2025 40 days 76 0
கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறையின் உமிழ்வு ஆனது, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக 2024 ஆம் ஆண்டில் அதிகரிக்காமல் உள்ளது.
இந்த அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மற்றும் கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான உலகளாவிய பருவநிலை என்ற கூட்டணியால் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் கட்டிடத் துறையின் உமிழ்வு சீராகியுள்ளது.
கட்டிடங்களின் ஆற்றல் பயன்பாட்டுத் தீவிரம் ஆனது சுமார் 10 சதவீதம் குறைந்து உள்ளது.
கூடுதலாக, இறுதிக் கட்ட எரிசக்தி தேவையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு விகிதம் ஆனது சுமார் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற கட்டுமானப் பொருட்கள் உலகளாவிய உமிழ்வுகளில் சுமார் 18 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன மற்றும் மிகக் கணிசமான அளவில் கழிவுகளை உருவாக்குகின்றன.