உலகளாவியப் பசுமை இல்ல வாயுக் கண்காணிப்பு உள்கட்டமைப்பு
April 6 , 2023 1020 days 484 0
ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பானது ஒரு புதிய உலகளாவியப் பசுமை இல்ல வாயுக் கண்காணிப்பு உள்கட்டமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது புவியை வெப்பமாக்கும் மாசுபாடுகளை அளவிடுவதற்கான சிறந்த வழிகளை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, மேலும், சரியான கொள்கைத் தேர்வுகளை அறிவிப்பதற்கும் உதவுகிறது.
இது விண்வெளியில் அமைந்த மற்றும் நிலப்பரப்பில் அமைந்தக் கண்காணிப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கும்.
மூன்று முக்கியப் பசுமை இல்ல வாயுக்கள் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை ஆகும்.
அவற்றில், பருவநிலை மீது 66% என்ற வெப்பமயமாதலின் அதிக அளவிலான ஒரு விளைவினை வழங்கும் வாயு CO2 ஆகும்.
2020 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதிவான CO2 அளவுகளின் உயர்வானது, கடந்தப் பத்தாண்டுகளில் பதிவான சராசரி உயர்வு விகிதத்தை விட அதிகமாக உள்ளது.