TNPSC Thervupettagam

உலகளாவியப் பட்டினி அபாய எச்சரிக்கை 2026

April 10 , 2026 2 days 60 0
  • சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவை அதிகரித்து வரும் உலகளாவியப் பட்டினி அபாயம் குறித்து எச்சரித்து உள்ளன.
  • எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் உணவு உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.
  • மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் விநியோகத் தடைகளையும், விலை ஏற்ற இறக்கங்களையும் ஏற்படுத்துகின்றன.
  • அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் உலகளாவிய உணவுப் பணவீக்கத்திற்கும், உணவுப் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கின்றன.
  • இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
  • இந்த நாடுகள் அதிக கடன் சுமையையும், விலை உயர்வைக்கட்டுப்படுத்தும் வரையறுக்கப் பட்ட திறனையும் கொண்டுள்ளன.
  • உணவு நெருக்கடியைத் தவிர்க்க உலகளாவிய முகமைகள் நிலைமையைக் கண்காணித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்