TNPSC Thervupettagam

உலகளாவியப் பாலின இடைவெளிக் குறியீடு 2026

September 18 , 2026 3 days 92 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் இந்தியா தனது 131 வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இந்தக் குறியீடு 145 பொருளாதாரங்களை உள்ளடக்கியது, இதில் ஐஸ்லாந்து (முதலாவது இடம்), பின்லாந்து (இரண்டாமிடம்) மற்றும் நார்வே (மூன்றாவது இடம்) ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன.
  • இந்தியாவின் ஒட்டு மொத்த பாலினச் சமத்துவ மதிப்பெண் 64.5% ஆக இருந்தது, இது உலகளாவிய சராசரியான 69.2% ஐ விடக் குறைவாகும்.
  • இந்தியாவின் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புக்கான சமத்துவ மதிப்பெண் 41.2% ஆகவும், கல்வி அடைவு 96.6% ஆகவும் இருந்தது.
  • அரசியல் அதிகாரம் என்பது இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட துணைக் குறியீடாகும், இதில் 24.5% இடைவெளி குறைக்கப்பட்டு உலகளவில் 67வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்