TNPSC Thervupettagam

உலகளாவியப் பாலின இடைவெளிக் குறியீடு

July 16 , 2022 1119 days 601 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பாலின இடைவெளி அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இப்பட்டியலில் இடம்பெற்ற 146 நாடுகளில் இந்தியா 135வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • வங்காளதேசம் (71), நேபாளம் (96), இலங்கை (110), மாலத்தீவுகள் (117) மற்றும் பூட்டான் (126) ஆகியவற்றுக்குப் பின்னால் இடம் பெற்று இந்தியா அதன் அண்டை நாடுகளின் மத்தியில் மோசமான தரவரிசையில் உள்ளது.
  • தெற்காசியாவில் இந்தியாவை விட ஈரான் (143), பாகிஸ்தான் (145), ஆப்கானிஸ்தான் (146) ஆகியவற்றின் மதிப்புகள் மட்டுமே மோசமாக உள்ளது.
  • பாலினச் சமத்துவத்தை அடைய இன்னமும் 132 ஆண்டுகள் ஆகும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில், இந்தப் பட்டியலில் இடம்பெற்ற 156 நாடுகளில் இந்தியா 140வது இடத்தில் இருந்தது.
  • "சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்தல் திறன்" ஆகியவற்றிற்கான துணைக் குறியீட்டில் இந்தியா 146வது இடத்தினைப் பெற்று மோசமான நிலையில் உள்ளது.
  • அரசியல் அதிகாரமளிப்பில் ஐஸ்லாந்து முதல் இடத்திலும், வங்காளதேசம் 9வது இடத்திலும் உள்ளன.
  • கல்வித் தகுதிக்கானத் தரவரிசையில் இடம்பெற்ற 146 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது.
  • மேலும் இந்தியாவின் மதிப்பெண் ஆனது கடந்த ஆண்டிலிருந்து சற்று மோசமாக உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், 156 நாடுகளில் இந்தியா 114 வது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்