“உலக சுகாதார அமைப்பினுடைய உலகளாவியப் புகையிலைத் தொற்று குறித்த அறிக்கை 2021: புதிய மற்றும் வளர்ந்து வரும் தயாரிப்புகள் குறித்த கண்காணிப்பு” (WHO report on the global tobacco epidemic 2021: Addressing new and emerging products) எனும் அறிக்கையானது முதல் முறையாக மின்னணு சிகரெட்டுகள் மற்றும் இதர ENDS எனும் பொருட்கள் குறித்த தரவுகளை வழங்கியுள்ளது.
ENDS என்பது மின்னணு நிகோட்டின் வழங்கீட்டுப் பொருட்கள் (Electrotic Nicotin Delivery Systems - ENDS) ஆகும்.
ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியனுக்கும் மேலானவர்கள் புகையிலைக்குப் பலியாகின்றனர் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவற்றுள் 7 மில்லியனுக்கும் மேலான உயிரிழப்புகள் நேரடிப் புகையிலைப் பயன்பாட்டின் காரணமாக ஏற்படுகிறது.
சுமார் 1.2 மில்லியன் உயிரிழப்புகள், புகை பிடிப்பவர்களுக்கு அருகிலுள்ள புகைப் பிடிக்கும் பழக்கமில்லாதவர்களுக்கு ஏற்படுகிறது
குறிப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது மின்னணு சிகரெட்டுகள் மற்றும் இதர ENDS பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.