உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் (WIPO) வெளியிடப்படும் உலகளாவியப் புத்தாக்கக் குறியீடு (GII) புத்தாக்க உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது.
சீனா 2024-இல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக (R&D) உலகின் அதிகம் செலவிட்ட நாடாக உள்ளது.
உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினம் 2024 ஆம் ஆண்டில் $2.87 டிரில்லியனை எட்டியது, இது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3% வளர்ச்சியடைந்தது.
சீனா $785.9 பில்லியனை செலவிட்டுள்ளது என்ற ஒரு நிலையில்இது அமெரிக்காவை ($781.8 பில்லியன்) விட அதிகமாகும்.
2024 இல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக $75.7 பில்லியனைச் செலவிட்ட இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
ஆசியா இப்போது உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சுமார் 45% செலவழிக்கிறது என்ற நிலையில்இது மேற்கத்திய ஆதிக்கத்திலிருந்து ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது.