TNPSC Thervupettagam

உலகளாவியப் பெருங்கடல் வெப்பநிலை – 2026 ஜூலை

August 12 , 2026 21 hrs 0 min 52 0
  • துருவப் பகுதிகளுக்கு வெளியே உள்ள உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்ப நிலை னது (SST) 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாதனை அளவை எட்டியது.
  • 60° வடக்கு மற்றும் 60° தெற்கு ஆகியவற்றுக்கு இடையேயான சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை 20.96°C ஆக இருந்ததோடு இது 2023 ஆம் ஆண்டில் ஜூலை மாத முந்தைய சாதனையான 20.89°C ஐ முறியடித்தது.
  • பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைகள் வேகமாக வலுவடைந்து வருவதுடன், அதிக பெருங்கடல் வெப்பநிலைக்கு பங்களிக்கின்றன.
  • 16.90°C சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலையுடன், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதமானது உலக அளவில் இரண்டாவது வெப்பமான மாதமாக அமைந்தது.
  • மேற்கு ஐரோப்பா அதன் வெப்பமான ஜூன்-ஜூலை காலகட்டத்தை வெப்ப அலைகள், வறண்ட நிலைகள் மற்றும் காட்டுத்தீயுடன் பதிவு செய்தது.
  • மேற்கு ஐரோப்பா மிகக் குறைந்த மேற்பரப்பு மண்ணின் ஈரப்பதத்தையும் பதிவு செய்தது. அதேவேளையில், கனடா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளை வறண்ட காலநிலைகள் பாதித்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்