TNPSC Thervupettagam

உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கை 2026

January 21 , 2026 10 hrs 0 min 19 0
  • உலக வங்கி உலகளாவிய வளர்ச்சியை மதிப்பிடுவதற்காக ஆண்டுதோறும் இரண்டு முறை வெளியிடப்படுகின்ற உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் (GEP) அறிக்கையை வெளியிட்டது.
  • 2025-26 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 6.3% அளவிலிருந்து 7.2% ஆக திருத்தப்பட்டது.
  • இந்தியாவில் வளர்ச்சிக் காரணிகளில் வலுவான உள்ளூர் தேவை, அதிகரித்து வரும் தனியார் நுகர்வு, வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற வீட்டு வருமானம் அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.
  • உலகளாவிய வர்த்தக வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 3.4% சதவீதத்திலிருந்து 2026 ஆம் ஆண்டில் 2.2% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் (EMDE) அரசாங்கக் கடன் 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 70% அளவினை எட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்