உலகின் 10 முன்னணி செல்வ மதிப்பு மிக்க மத்திய வங்கிகள் - 2024
August 14 , 2024 447 days 474 0
சாவரைன் வெல்த் ஃபண்ட் இன்ஸ்டிடியுட் (SWFI) என்ற ஒரு நிறுவனமானது, மொத்தச் சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 10 முன்னணி செல்வ மதிப்பு மிக்க மத்திய வங்கிகளைப் பட்டியலிட்டுள்ளது.
வட அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியானது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து சீனாவின் மக்கள் வங்கி மற்றும் ஜப்பான் வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்தியாவின் இந்திய ரிசர்வ் வங்கி உலகளவில் 12வது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை மதிப்பானது ஆண்டிற்கு 11.08% அதிகரித்து 70.47 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.