நியூயார்க் நகரமானது சுமார் 384,500 மில்லியனர்கள், 818 சென்டி-மில்லியனர்கள் (100 மில்லியன் டாலருக்கும் அதிகமானச் சொத்துக்கள் கொண்ட தனிநபர்கள்) மற்றும் 66 பில்லியனர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் பே ஏரியா பகுதியானது (சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கு உள்ளிட்டப் பகுதி) சுமார் 305,700 மில்லியனர்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
298,300 மில்லியனர்களைக் கொண்டு ஆசியாவின் பணக்கார நகரமாக உலகளவில் 3வது இடத்தில் டோக்கியோ உள்ளது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், லாஸ் ஏஞ்சல்ஸ், இலண்டன், பாரீஸ், ஹாங்காங் மற்றும் சிட்னி போன்ற நகரங்கள் உள்ளன.
இந்தியாவின் மும்பை நகரமானது 58,800 மில்லியனர்கள், 236 சென்டி-மில்லியனர்கள் மற்றும் 29 பில்லியனர்களுடன் 27வது இடத்தில் உள்ளது.
டெல்லி 30,700 மில்லியனர்கள் மற்றும் 16 பில்லியனர்களுடன் 36வது இடத்தில் உள்ளது.