ஜெர்மனியைச் சேர்ந்த 'வொர்த் எ ஜர்னி' நிறுவனம் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டு உலகின் 100 சிறந்த அருங்காட்சியகங்கள் பட்டியலில் பாட்னாவில் உள்ள பீகார் அருங்காட்சியகம் உலக அளவில் 9 வது இடத்தையும், ஆசியாவில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய அருங்காட்சியகம் பீகார் அருங்காட்சியகம் மட்டுமே.
மெக்சிகோவின் மியூசியோ நேஷனல் டி அன்ட்ரோபோலோஜியா, ஸ்பெயினின் மியூசியோ டெல் பிராடோ மற்றும் டென்மார்க்கின் லூசியானா நவீன கலை அருங்காட்சியகம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்த அருங்காட்சியகங்களாகும்.
நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகம் 10 வது இடத்தையும், பாரிஸின் லூவ்ரே அருங்காட்சியகம் 31 வது இடத்தையும் பிடித்துள்ளன.
கட்டிடக் கலைஞர் ஃபுமிஹிகோ மாகி மற்றும் மும்பையைச் சேர்ந்த ஓபோலிஸ் ஆர்க்கிடெக்ட்ஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த பீகார் அருங்காட்சியகம் பாட்னாவில் நேரு பாதையில் அமைந்துள்ளது.