TNPSC Thervupettagam

உலகின் 100 சிறந்த அருங்காட்சியகங்கள் 2026

October 31 , 2026 7 days 120 0
  • ஜெர்மனியைச் சேர்ந்த 'வொர்த் எ ஜர்னி' நிறுவனம் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டு உலகின் 100 சிறந்த அருங்காட்சியகங்கள் பட்டியலில் பாட்னாவில் உள்ள பீகார் அருங்காட்சியகம் உலக அளவில் 9 வது இடத்தையும், ஆசியாவில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய அருங்காட்சியகம் பீகார் அருங்காட்சியகம் மட்டுமே.
  • மெக்சிகோவின் மியூசியோ நேஷனல் டி அன்ட்ரோபோலோஜியா, ஸ்பெயினின் மியூசியோ டெல் பிராடோ மற்றும் டென்மார்க்கின் லூசியானா நவீன கலை அருங்காட்சியகம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்த அருங்காட்சியகங்களாகும்.
  • நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகம் 10 வது இடத்தையும், பாரிஸின் லூவ்ரே அருங்காட்சியகம் 31 வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • கட்டிடக் கலைஞர் ஃபுமிஹிகோ மாகி மற்றும் மும்பையைச் சேர்ந்த ஓபோலிஸ் ஆர்க்கிடெக்ட்ஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த பீகார் அருங்காட்சியகம் பாட்னாவில் நேரு பாதையில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்