இந்திய நாடானது 2029 ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவதுப் பெரியப் பொருளாதாரமாக மாற உள்ளது.
தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், இந்தியா 2027 ஆம் ஆண்டில் ஜெர்மனியையும், 2029 ஆம் ஆண்டில் ஜப்பானையும் மிஞ்சும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை கூறியுள்ளது.
உலக அளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு தற்போது 3.5 சதவீதமாக உள்ளது.
2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் பங்கு, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜெர்மனியின் தற்போதையப் பங்கான 4 சதவீதத்தை விஞ்ச வாய்ப்புள்ளது.
இருப்பினும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், இந்தியா இன்னும் உலகின் பெரும்பாலான பொருளாதாரங்களை விட பின்தங்கியே உள்ளது.
உலக வங்கியின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,277 டாலராக இருந்த அதே சமயம் ஐக்கிய ராஜ்ஜியத்தின் தனிநபர் வருமானம் 47,334 டாலராக இருந்தது.
சீனாவின் தனிநபர் வருமானம் ஆனது, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் 12,556 டாலர் என்ற மதிப்பை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாக இருந்தது.