TNPSC Thervupettagam

உலகின் 4வது பெரிய பொருளாதாரம் 2025

May 29 , 2025 11 days 84 0
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உலக பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் (2025-26 ஆம் நிதியாண்டு) இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும்.
  • இந்தியாவானது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக மட்டுமே பின்தங்கியிருக்கும்.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா ஐக்கியப் பேரரசினை முந்தி ஐந்தாவது பெரிய நாடாக மாறியது.
  • கணிப்பின் படி, இந்தியாவின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014 முதல் 2025 ஆம் ஆண்டு வரை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
  • இது ஒரு தசாப்தத்தில் பதிவான 105% வளர்ச்சியாகும்.
  • மேலும் 2025 ஆம் ஆண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒரு பொருளாதாரமாக மாறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்