TNPSC Thervupettagam

உலகின் அரிதான பெரிய நிலவாழ் பாலூட்டி இனத்தின் மரபணு

May 10 , 2025 20 hrs 0 min 37 0
  • உலகின் அரிதான மிகப்பெரிய நில வாழ் பாலூட்டி இனமான கடமான்/சாவோலாவின் (சூடோரிக்ஸ் நாகெடின்ஹென்சிஸ்) மரபணுவை அறிவியலாளர்கள் வரைபடமாக்கி உள்ளனர்.
  • சுமார் 5,000 முதல் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இனங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
  • அதிகபட்சக் கடைநிலைப் பனிப்பாறை பரவல் காலத்திலும் அதற்குப் பிறகுமான காலத்தின் போது அடர்ந்த காடுகளின் பரவலில் ஏற்பட்ட சில மாற்றங்களுடன் இந்தப் பிளவு ஒன்றியது.
  • சாவோலா இனமானது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'மிகவும் அருகிய' ஒரு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • வியட்நாம் மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள அன்னமைட் மலைத் தொடரின் மூடுபனி நிறைந்த மலைப் பகுதி காடுகளில் அவை காணப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்