TNPSC Thervupettagam

உலகின் இரண்டாவது பெரிய திறன்பேசி சந்தை - இந்தியா

February 18 , 2026 19 hrs 0 min 22 0
  • 2025 ஆம் ஆண்டில், சீனாவிற்குப் பிறகு 740 மில்லியனுக்கும் அதிகமான திறன்பேசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், உலகளவில் இரண்டாவது பெரிய செயலில் உள்ள திறன்பேசிகள் நிறுவப்பட்ட தளமாக இந்தியா மாறியது.
  • செயலில் உள்ள அடிப்படை என்பது ஆண்டு விற்பனையை மட்டுமல்லாமல், தற்போது பயன்படுத்தப்படும் மொத்த திறன்பேசிகளின் எண்ணிக்கையையும் குறிக்கிறது.
  • இந்திய மக்கள் தொகையில் 50%க்கும் அதிகமானோர் (சுமார் 1.45 பில்லியன்) இப்போது திறன்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • இந்தியாவில் சராசரி திறன்பேசி மாற்று சுழற்சியானது சுமார் 42 மாதங்கள் ஆகும் என்ற நிலையில் இது உலகளாவியச் சராசரியான 47 மாதங்களை விட சற்று குறைவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்