'உலகின் சிறந்தப் பள்ளிக்கான பரிசுகள் 2026' என்ற விருதிற்கு ஏழு இந்தியப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பதோடு ஒரே ஆண்டில் எந்தவொரு நாட்டிலிருந்தும் அதிகபட்ச எண்ணிக்கையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
T4 எஜுகேஷன் அமைப்பால் இந்த விருதுகளானது புத்தாக்கம், சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் செயல்பாடு, சவால்களை முறியடித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவளித்தல் ஆகிய ஐந்து பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
PCMC சத்ரபதி ஷாஹுஜி மகாராஜ் ஆங்கில வழிப் பள்ளி (புனே), ஆர்மிகுட்வில் பள்ளி வுசூர் (அனந்த்நாக்), ஹெல்தி பிளானட் TGA ஏர்லி இயர்ஸ் பள்ளி (நொய்டா), இன்வென்ச்சர் அகாடமி (பெங்களூரு), சேத் எம்.ஆர்.ஜெய்ப்பூரியா பள்ளி (லக்னோ), யூரோஸ்கூல் பன்னேருகட்டா (பெங்களூரு) மற்றும் சேத் ஆனந்த்ராம் ஜெய்ப்பூரியா பள்ளி (லக்னோ) ஆகியன பட்டியலில் உள்ள இந்தியப் பள்ளிகளாகும்.
வெற்றியாளர்களை நிபுணர் தீர்ப்பாயக் குழு தேர்ந்தெடுக்கும், அதே வேளையில் உலகளாவிய பொது வாக்கெடுப்பு மூலம் 'சமூகத் தேர்வு விருது' முடிவு செய்யப்படும்.
இறுதியாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் 2026 ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிக்கப் படுவார்கள் என்பதோடு மேலும் தேர்வு செய்யப் பட்ட பள்ளிகள் 2027 ஆம் ஆண்டு ஜனவரியில் லண்டனில் நடைபெறும் உலகப் பள்ளிகள் உச்சி மாநாட்டில் பங்கேற்கும்.