TNPSC Thervupettagam

உலகின் சுதந்திரம் அறிக்கை 2022

March 12 , 2022 1160 days 519 0
  • ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான சமூகம் என்பதன் அடிப்படையில் “பகுதியளவு சுதந்திரம் மிக்க” நாடாகத் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்தியா குறிப்பிடப் பட்டுள்ளது.
  • “உலகில் சுதந்திரம் 2022 – உலகளவில் சர்வாதிகார ஆட்சியின் விரிவாக்கம்” என்ற ஒரு தலைப்பில் ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தத் தகவலானது கூறப் பட்டுள்ளது.
  • ஃப்ரீடம் ஹவுஸ் என்பது அரசியல் உரிமைகள் மற்றும் மக்கள் சுதந்திரம் ஆகியவற்றை மதிப்பிடுகின்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.
  • 2022 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இந்தியா 100 மதிப்புக்கு 66 மதிப்புகளைப் பெற்றுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் மதிப்பீட்டில் இந்தியா 67 மதிப்புகளைப் பெற்றிருந்தது.
  • 2020 ஆம் ஆண்டில் 71 மதிப்புகளுடன் இந்தியா ஒரு சுதந்திரமிக்க நாடாகத் திகழ்ந்தது.
  • இணையச் சுதந்திரத்தில் இந்தியா 49 மதிப்புகளைப் பெற்றுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 85 நாடுகள் சுதந்திர நாடுகளாகவும், 56 நாடுகள் பகுதியளவு சுதந்திர நாடுகளாகவும், 69 நாடுகள் மிகக் குறைவான சுதந்திரமுள்ள நாடுகளாகவும் குறிப்பிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்