மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார்.
இந்த மாநாட்டில் பூமியிலுள்ள 85% நீரானது வேளாண் துறைக்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது என அவர் கூறினார்.
எனவே வேளாண் துறையில் நீர் வளங்காப்பு முறைகளைப் பயன்படுத்தி நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள நீர்வளங்களை திறன்மிகு முறையில் பயன்படுத்த வேண்டும்.
2021 ஆம் ஆண்டு உலக நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடானது “Redefining Our Common Future : Safe & Secure Environment For All” எனும் கருத்துருவை மையமாகக் கொண்டு நடத்தப் பட்டது.
இது ஆற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
இது பல்வேறு பங்குதாரர்களை ஒரே இடத்தில் திரட்டி உலக சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையிலான தீர்வுகளை வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு மாநாடாகும்.