ப்ளூம்பெர்க் நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பணக்காரக் குடும்பங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கை உலகளவில் சுமார் 25 பணக்காரக் குடும்பங்களின் செல்வத்தையும் அவர்களின் மொத்த செல்வ வளர்ச்சியையும் கண்காணிக்கிறது.
வால்டன் குடும்பம் (வால்மார்ட், அமெரிக்கா) 513.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து 335.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அல் நஹ்யான் குடும்பம் (UAE), 213.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அல் சவுத் குடும்பம் (சவுதி அரேபியா) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அம்பானி குடும்பம் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்) 105.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 8வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய குடும்பம் இதுவாகும்.
முதல் 25 குடும்பங்களின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு என்பது தோராயமாக 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்ற நிலையில்இது 2024 ஆம் ஆண்டை விட 358.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும்.