HDFC வங்கியானது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் ஆகும் என்ற நிலையில் இதன் மதிப்பிடப்பட்ட நிறுவன மதிப்பு 45 பில்லியன் டாலர் ஆகும்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் சுமார் 44.2 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.
ஏர்டெல், இன்ஃபோசிஸ் மற்றும் ICICI வங்கி ஆகியவை இந்தியாவின் அடுத்த மூன்று முன்னணி நிறுவனங்கள் ஆகும்.
100 முன்னணி இந்திய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மதிப்பு 523.5 பில்லியன் டாலர் ஆகும் என்ற நிலையில்இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 13% ஆகும்.
சோமாட்டோ நிறுவனம் 6 பில்லியன் டாலர் மதிப்புடன், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது.
தாஜ், இண்டிகோ மற்றும் மேக்மைட்ரிப் போன்ற பயணச் சேவை நிறுவனங்கள் நிறுவன மதிப்பில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்தன.