இந்திய இரயில்வே நிர்வாகமானது மணிப்பூரில் உலகின் மிக உயரமான ஒரு தூண் இரயில் பாலத்தைக் கட்டமைத்து வருகிறது.
மணிப்பூரில் இரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும் இந்தத் திட்டமானது ஜிரிபம் – இம்பால் இரயில்வே பாதையின் ஒரு பகுதியாகும்.
இந்தப் பாலமானது 141 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.
மணிப்பூர் பாலத்தின் மொத்த நீளமானது 703 மீட்டர் ஆகும்.
தற்போது ஐரோப்பாவின் மாண்டினீக்ரோ எனுமிடத்தில் கட்டமைக்கப்பட்ட 139 மீட்டர் உயரமான மலா-ரிஜேகா (Mala-Rijeka) என்ற உயர்கோபுரப் பாலமானது ஒரு உயரமான தூண் பாலமாக குறிப்பிடப்படுகிறது.