எவரெஸ்ட் சிகரத்தில் வீசிய புயல் காற்றினால் உலகின் மிக உயரமான வானிலைக் கண்காணிப்பு நிலையம் ஆனது அழிக்கப்பட்டது.
இந்த வானிலைக் கண்காணிப்பு நிலையம் ஆனது 8,810 மீட்டர் (28,904 அடி) உயரத்தில், எவரெஸ்ட் சிகரத்திற்குக் கீழே வெறும் 39 மீட்டர் (128 அடி) தொலைவில் அமைந்து உள்ளது.
இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
முன்னதாக, இந்த வானிலைக் கண்காணிப்பு நிலையம் ஆனது எவரெஸ்டின் பால்கனி எனப்படும் பகுதியில், தற்போது இருந்த பகுதியை விட சுமார் 400 மீட்டர் தாழ்வான தொலைவில் அமைந்திருந்தது.
8,000 மீட்டர் உயரத்திற்கும் மேல் நிறுவப்பட்ட முதல் நிலப்பரப்பு சார்ந்த வானிலைக் கண்காணிப்பு நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.