இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான குகை ஓவியம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஓவியம், இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள சுண்ணாம்புக்கல் குகைகளில் காணப்படும் ஒரு சிவப்பு கை அச்சின் படம் ஆகும்.
யுரேனியம்-தொடர் பகுப்பாய்வைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அறிவியல் காலக் கணிப்பின்படி, இந்தக் கை அச்சு சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்துள்ளது.
இதுவரை அறியப்பட்ட ஐரோப்பிய குகை ஓவியங்களை விட இது கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகள் பழமையானது.