TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய இணைய சங்கேதப் பணப் பரிவர்த்தனைக்குத் தடை – ஐக்கிய ராஜ்ஜியம்

July 1 , 2021 1497 days 713 0
  • பிரிட்டனின் நிதியியல் செயல்பாட்டு ஆணையமானது பைனான்சு (Binance) எனப் படும் உலகின் மிகப்பெரிய இணைய சங்கேதப் பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குத் தடை விதித்துள்ளது.
  • பைனான்சு என்பது கேமேன் தீவுகளில் மேற்கொள்ளப் படும் ஒரு இணைய சங்கேதப் பண பரிவர்த்தனையாகும்.
  • இது 2017 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது பல்வேறு இணைய சங்கேதப் பண பரிவர்த்தனைக்கான தளங்களை உருவாக்கி உள்ளது.
  • இது சாங்க்பெங்ச் ஜாவோ என்பவரால் நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் முதலில் சீனாவில் அமைந்திருந்தது.
  • சீனாவில் அதிகரிக்கப்பட்ட இணைய சங்கேதப் பணம் மீதான கட்டுப்பாடுகளின் காரணமாக இதன் தலைமையகமானது பின்பு சீனாவிலிருந்து இடம் மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்