உலகின் மிகப்பெரிய கப்பல் மறுசுழற்சி செய்யும் நாடு - இந்தியா
June 29 , 2026 32 days 112 0
உலகளாவிய கப்பல் மறுசுழற்சியில் 35.4% பங்குகளுடன், இந்தியா 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய கப்பல் மறுசுழற்சி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் 1.86 மில்லியன் மொத்த டன் என்ற அளவில் இருந்த கப்பல் மறு சுழற்சி, 2025 ஆம் ஆண்டில் 2.99 மில்லியன் மொத்த டன்னாக அதிகரித்து இந்தியா மறு சுழற்சி செய்துள்ளது.
குஜராத்தில் உள்ள அலங் கப்பல் மறுசுழற்சி தளம் உலகின் மிகப்பெரிய கப்பல் மறு சுழற்சி வசதிகளில் ஒன்றாகும்.
2019 ஆம் ஆண்டின் கப்பல்கள் மறுசுழற்சிச் சட்டமானது, பாதுகாப்பான மற்றும் சுற்றுச் சூழல் ரீதியாக முறையான கப்பல் மறுசுழற்சிக்கான ஹாங்காங் சர்வதேச மாநாட்டுடன் இந்தியாவின் கப்பல் மறுசுழற்சி விதிகளை ஒருங்கிணைக்கிறது.
இந்தியா இந்த மாநாட்டிற்கு 2019 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது, மேலும் இது 2025 ஆம் ஆண்டு ஜூன் 26 முதல் கட்டாயமாக்கப்பட்டது.
இந்திய கடல்சார் தொலைநோக்கு 2030-இன் கீழ், தனது கப்பல் மறுசுழற்சி திறனை 9 மில்லியன் இலகு இடப்பெயர்வு டன்களாக (LDT) விரிவுபடுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.