உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி சொத்துக்கள்
September 5 , 2020 1816 days 809 0
மெர்கோம் கேப்பிட்டல் என்ற நிறுவனமானது செயல்பட்டு வரும் திட்டங்கள், கட்டமைக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளி வழங்கப் பட்டத் திட்டங்கள் என்ற அடிப்படையில் அதானி பசுமை ஆற்றல் உற்பத்தி நிறுவனத்தை (AGEL - Adani Green Energy Ltd) உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி சொத்துக்கள் கொண்டுள்ள நிறுவனமாக தரவரிசைப் படுத்தியுள்ளது.
AGEL நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்டு வரும் மற்றும் ஒப்பந்தப் புள்ளி பெற்றுள்ள திறனானது 10.1 ஜிகாவாட் ஆக உள்ளது. அதன் செயல்படும் திறனானது ஏறத்தாழ 3 ஜிகாவாட் ஆக உள்ளது.
அதானி குழுமத்தின் ஒட்டு மொத்தத் திறன் 12.32 ஜிகாவாட் ஆக உள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அமைக்கப் பட்டுள்ள மொத்தத் திறனை விட அதிகமாகும்.
அதானி நிறுவனம் தனது முதலாவது சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தை 2015 ஆம் ஆண்டில் தொடங்கியது.