உலகின் மிகப்பெரிய ஒரு சூரியசக்தி மரம் நிறுவப்பட்டதை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இது பஞ்சாபில் உள்ள லூதியானா என்னுமிடத்தில் உள்ள சிறப்பு இயந்திர மையத்தில் கட்டமைக்கப் பட்டுள்ள 309.83 மீ2 அளவிலான சூரியசக்தி தகடு பரப்பினைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இது மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டது.