உலகின் மிகப்பெரிய செங்குத்து உந்துவிசை கலவை இயந்திரம்
February 21 , 2025 301 days 253 0
இஸ்ரோ விண்வெளி நிறுவனமானது, உலகளவில் திட உந்துவிசைக்கான மிகப்பெரிய கட்டமைப்பான சுமார் 10 டன் எடையுள்ள 'செங்குத்து உந்து விசை எரிபொருள் கலப்பு இயந்திரத்தினை’ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
இந்திய விண்வெளிப் போக்குவரத்து அமைப்புகளில் திட உந்துவிசை முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஓர் உந்துவிசை எரிபொருள் கலவை எந்திரம் என்பது விண் ஏவு கல உந்துவிசைப் பொருட்களை, மிகவும் குறிப்பாக எரிபொருள் மற்றும் ஆக்சிஜனேற்றப் பொருட்களை ஒன்றாக கலக்கும் ஒரு இயந்திரமாகும்.
இது ஏவு கலத்தின் திட விசைப் பொறிகளுக்கு என்று சீரான மற்றும் நம்பகமான உந்து விசைக் கலவையை வழங்குவதை உறுதி செய்யும்.