உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு திட்டம்
March 6 , 2024 528 days 561 0
கூட்டுறவுத் துறையில் மேற்கொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய தானியச் சேமிப்புக் கிடங்குத் திட்டம் ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 700 லட்சம் டன் சேமிப்புத் திறன் கொண்ட மையமானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிடங்குகள் மற்றும் பண்டகச் சாலைகள் கட்டமைக்கப்படும்.
இந்தியாவின் தானிய உற்பத்தியின் 100 சதவீத அளவிலான தானியங்களைச் சேமித்து வைப்பதற்கான சேமிப்புத் திறனை உருவாக்குவதை இந்தத் திட்டம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.