அதானி குழுமம் மற்றும் டோட்டல்எனர்ஜிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் சூழலமைவினை உருவாக்க உள்ளன.
இந்தியா, உலகிலேயே அதிகளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
2070 ஆம் ஆண்டிற்குள் சுழிய உமிழ்வு நாடாக மாறுவதற்கு உதவும் வகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் 5 மில்லியன் டன் அளவு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யத் திட்டம் இட்டுள்ளது.
டோட்டல்எனர்ஜிஸ் என்ற நிறுவனமானது, உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும்.