உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியமின்சக்தி உற்பத்தி ஆலை – சிங்கப்பூர்
March 19 , 2021 1623 days 705 0
உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலையானது சிங்கப்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்நாடு கடலில் மிதக்கும் ஆற்றல் உற்பத்தி ஆலைகளையும் கடலின் குறுக்கே நீர்த் தேக்கங்களையும் உருவாக்கத் தொடங்கியுள்ளது.
உலகிலேயே அதிகளவில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.
காலநிலை மாற்ற இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்காகவும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டினைக் குறைப்பதற்காகவும் சிங்கப்பூர் நாடானது மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகிறது.
இந்தப் பணியினை செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.