உலகின் மிகப்பெரிய மின்சாரப் பயணக் கப்பலானது யாங்சே நதியில் தனது முதல் பயணத்தை முடித்துக் கொண்டு, சீனாவின் மத்திய ஹிபே மாகாணத்திலுள்ள யிசாங் என்ற துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தப் பயணக் கப்பலானது, 7,500 கிலோவாட் – மணி திறன் கொண்ட ஒரு மாபெரும் கடல் சார் மின்கலனால் ஆற்றலைப் பெறுகிறது.
இந்தக் கப்பலின் பெயர் யாங்சே நதி த்ரீ கார்ஜஸ் 1 (Yangtze River Three Gorges 1) என்பது ஆகும்.
இந்தக் கப்பலானது முக்கியமான சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிப் பயன்படுத்தப் படும்.