17.5 மில்லியன் எண்ணிக்கையில், இந்திய வம்சாவளியினர் உலகின் மிகப்பெரிய வம்சாவளியினராக தொடர்கின்றனர்.
இது 2019 ஆம் ஆண்டின் இடைக் காலத்தில் உலகின் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த 272 மில்லியன் மக்களில் 6.4% ஆகும்.
ஐக்கிய அரபு அமீரகம் (3.4 மில்லியன்), அமெரிக்கா (2.6 மில்லியன்) மற்றும் சவுதி அரேபியா (2.4 மில்லியன்) ஆகிய நாடுகள் இந்தியர்களுக்கான முதல் மூன்று புலம்பெயரும் இடங்களாகும்.
கடந்த ஆண்டில் 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் நிலை 2019 என்ற இந்த அறிக்கை ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் நிறுவனத்தின் மக்கள்தொகைப் பிரிவால் வெளியிடப் பட்டுள்ளது..
இரண்டாவது மிகப்பெரிய வம்சாவளியினராக மெக்சிகோவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் (11.8 மில்லியன்) கட்டமைக்கின்றனர். அதைத் தொடர்ந்து சீனா (10.7 மில்லியன்), ரஷ்யா (10.5 மில்லியன்), சிரியா (8.2 மில்லியன்), வங்கதேசம் (7.8 மில்லியன்), பாகிஸ்தான் (6.3 மில்லியன்), உக்ரைன் (5.9 மில்லியன்), பிலிப்பைன்ஸ் (5.4 மில்லியன்) மற்றும் ஆப்கானிஸ்தான் (5.1 மில்லியன்) ஆகிய நாட்டவர் உள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் மிக அதிகமான சர்வதேச புலம்பெயர்வாளர்களுக்கு (82 மில்லியன்) பிராந்திய ரீதியில் ஐரோப்பா அடைக்கலம் அளித்தது. அதனைத் தொடர்ந்து வடக்கு அமெரிக்கா (59 மில்லியன்), வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியப் பகுதி (49 மில்லியன்) ஆகியன உள்ளன.
நாடுகள் மட்டத்தில், அமெரிக்கா உலகின் மொத்த புலம்பெயர்வாளர்களில் 19 சதவிகித அளவிற்குச் சமமாக மிக அதிக அளவிற்கு (51 மில்லியன்) சர்வதேச புலம்பெயர்வாளர்களுக்கு அடைக்கலம் அளித்துக் கொண்டிருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து ஜெர்மனியும் சவுதி அரேபியாவும் தலா 13 மில்லியன் எண்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் புலம்பெயர் ஆதரவளிக்கும் நாடாகவும், ரஷ்யா (12 மில்லியன்) ஐக்கியப் பேரரசு (10 மில்லியன்), ஐக்கிய அரபு அமீரகம் (4 மில்லியன்), பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா (தலா 8 மில்லியன் அளவிலும்), இத்தாலி (16 மில்லியன்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.